ஐதராபாத்தை சேர்ந்த 80 வயது முதியவர் முகமது சலிமுதீன் என்பவர் தனது உறவினரான அப்துல் என்பவர் காதலித்த பெண்ணை தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். இருவருக்கும் மறுநாள் திருமணம் செய்து வைப்பதாக அவர் உறுதி அளித்துள்ளார். காதலனின் நெருங்கிய உறவினர் என்பதாலும் வயது முதியவர் என்பதாலும் அவரது வீட்டில் அந்த இளம்பெண் இரவு தங்கி உள்ளார்
இந்த நிலையில் இரவு சாப்பாட்டில் மயக்க மருந்து கலந்து கொடுத்த முதியவர் அந்தப் பெண் மயக்கம் அடைந்த உடன் முதியவரும் அந்த காதலரும் மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த நிலையில் மயக்கம் தெளிந்து எழுந்த உடன் தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை அறிந்து உடனடியாக இதுகுறித்து அந்த இளம்பெண் போலீசில் புகார் செய்தார்