துக்ளக் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு: திக-வினர் கைது!
செவ்வாய், 28 ஜனவரி 2020 (10:50 IST)
துக்ளக் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயன்ற திராவிடர் கழகத்தை சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை மயிலாப்பூரில் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி வசித்து வருகிறார். நேற்று அதிகாலை 3 மணி அளவில் 3 பைக்குகளில் வந்த சிலர் தங்கள் பைகளில் இருந்து பெட்ரோல் குண்டுகளை எடுத்து, குருமூர்த்தியின் வீட்டின் மீது வீச முயற்சித்துள்ளனர்.
இது குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்ட அடுத்த இரண்டு மணி நேரத்தில் குருமூர்த்தியின் வீட்டிற்குச் சென்று அவரது பாதுகாப்பை உறுதி செய்வதோடு சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடியாகக் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.
அதன்படி, சிசிடிவி கேமராவை ஆதாரமாக வைத்து இந்த சம்பவத்தில் ஈடுப்பட்ட 8 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த 8 பேரும் திராவிடர் கழகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.