தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று குணமாகியவர்கள் எத்தனை பேர்?

வியாழன், 21 மே 2020 (18:54 IST)
தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 776 பேர்கள் என்றும் இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 13,967 ஆக உயர்ந்துள்ளது என்றும் சற்றுமுன் பார்த்தோம். அதேபோல் சென்னையில் இன்று மட்டும் 567 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8795 ஆக உயர்ந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் நேற்று தமிழகத்தில் கொரோனாவில் இருந்து 987 பேர்கள் குணமாகியுள்ள நிலையில் இன்று வெறும் 400 பேர்கள் மட்டுமே தமிழகத்தில் குணமாகியுள்ளனர். மேலும் நெகட்டிவ் ரிசல்ட் வந்து வீட்டுக்கு டிஸ்சார்ஜ் ஆகி சென்றவர்களில் சிலர் இன்றும் மீண்டும் அட்மிட் ஆகியுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது
 
மேலும் தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 12100 என்பதும், இதனையடுத்து தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 355,893 என்பதும் குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்