கள்ளக்குறிச்சி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பரமசிவம், கல்யாணசுந்தரம் உள்பட 3 பேர் இன்று உயிரிழந்ததாகவும் இதனை அடுத்து பலி எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. மேலும் சிகிச்சை பெற்று வருபவர்களில் இன்னும் கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
தமிழக வரலாற்றில் கள்ளச்சாராய விவகாரத்தில் ஒரே சம்பவத்தில் இத்தனை உயிர்கள் பலி என்பது இதுவே முதல் முறை என்பதால் கள்ளக்குறிச்சி கருணாபுரம் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. இந்த நிலையில் இனிமேல் இது போன்ற ஒரு சம்பவம் நடக்காத வகையில் தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.