அதில் போதிய ஆவணங்கள் இல்லை என கூறி அவரது மனு சிறை நிர்வாகத்தால் நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து மீண்டும் சில ஆவணங்களை இணைத்து பரோல் கேட்டு விண்ணப்பித்திருந்தார் சசிகலா. இதனையடுத்து சசிகலா பரோல் குறித்து சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்துக்கு தடையில்லா சான்றிதழ் கேட்டு கடிதம் அனுப்பியிருந்தது கர்நாடக சிறைத்துறை.
இந்நிலையில், தற்போது சசிகலாவிற்கு 5 நாட்கள் மட்டும் பரோல் அளித்து சிறைத்துறை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அவரை சென்னைக்கு அழைத்து வர ஏற்கனவே டிடிவி தினகரன் அக்ரஹார சிறையில் காத்திருப்பது குறிப்பிடத்தக்கது. காரில் சசிகலாவை அவர் அழைத்து வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.