அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 4,000 உதவி பேராசிரியர்.. எப்போது விண்ணப்பிக்கலாம்?

Siva

வியாழன், 14 மார்ச் 2024 (08:14 IST)
தமிழ்நாட்டில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 4,000 உதவி பேராசிரியர்  பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட இருக்கும் நிலையில் மார்ச் 28ம் முதல் ஏப்ரல் 29 வரை உதவி பேராசிரியர் பணிக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்  என்றும், அரசு கலை, அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு ஆகஸ்ட் 4-ம்  தேதி தேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக முழுவதும் உள்ள அரசு கலைக்கல்லூரிகளில் 4000 உதவி பேராசிரியர் பணி காலியாக இருக்கும் நிலையில் அந்த காலியிடங்களை நிரப்ப வேண்டும் என்று அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்து வந்தன.

இந்த நிலையில் தற்போது இது குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளதை அடுத்து இந்த பணிக்கு பலர் ஆர்வத்துடன் விண்ணப்பிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது,. மார்ச் 28ஆம் தேதி முதல் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று கூறப்படும் நிலையில் ஒரு மாத காலம் விண்ணப்பிக்கும் கால அவகாசம் இருப்பதால் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் படி அறிவுறுத்தப்படுகின்றனர்.

தமிழகம் முழுவதும் 4000 உதவி பேராசிரியர் பணிகள் காலியாக இருப்பதை அடுத்து ஏராளமானோர் இந்த பணிக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்