ஆர்.கே.நகரில் பணத்தை வாரி இறைக்கும் தினகரன்; அதிர வைக்கும் கணக்கு

புதன், 13 டிசம்பர் 2017 (14:35 IST)
தினகரனின் பிரசார கூட்டம் ஒவ்வொன்றுக்கும் சுமார் 3 ஆயிரம் பேர் வரை கூடுவதால் ஒருநாளில் ஒட்டுமொத்த செலவு ரூ.3 கோடியை தாண்டி விடுகிறதாம்.

 
வரும் டிசம்பர் 21ஆம் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு சுயேட்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிடும் தினகரன், திமுக மற்றும் அதிமுக ஆகியோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குக்கர் சின்னம் ஆர்.கே.நகர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 
 
ஆளும் கட்சியும், தினகரனும் பிரசாரத்துக்கு பாரபட்சம் இல்லாமல் பணம் செலவிட்டு வருகின்றனர் என கூறப்படுகிறது. தேர்தல் ஆணையம் வேட்பாளர்களின் பிரசார செலவுகளை கணக்கிட்டு வருகிறது. இதனிடையே ஆர்.கே.நகர் வெற்றி வாய்ப்பு குறித்த கருத்துக்கணிப்பில், டிடிவி தினகரன் அமோக வெற்றிப்பெறுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் தினகரனின் ஒருநாள் பிரசார செலவு குறித்த கணக்கு வெளியாகியுள்ளது. அதாவது ஒருநாளில் சுமார் ரூ.3 கோடி செலவு செய்து வருகிறார்களாம். தினகரன் பிரசாரத்துக்கு வருகிறார் என்றாலே குறைந்தது 3 ஆயிரம் மக்கள் கூடிவிடுகிறார்களாம். அவர்களுக்கான செலவுகள், ஆரத்தி செலவுகள், நிர்வாகிகளுக்கான செலவுகள் உள்ளிட்டவை கணக்கிட்டால் மூன்றரை கோடி வரை செலவாகிறது என செய்திகள் வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்