சமீபத்தில் ஈரோட்டில் திமுக மண்டல மாநாடு நடைபெற்றது. பிரமாண்டமான மேடை, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பிரபலங்களின் வருகை, வண்ண வண்ண விளக்குகள் என மண்டல மாநாடு ஒரு பெரிய திருவிழா போல் நடத்தப்பட்டது. இந்த மாநாட்டிற்காக தமிழகத்தின் அனைத்து பகுதியில் இருந்தும் திமுக தொண்டர்கள் கடல் அலைபோல் குவிந்திருந்தனர்
குறிப்பாக மாநாடு நடந்த பகுதியின் அருகில் உள்ள விஜயமங்கலம், கள்ளீயம்புதூர், பெரிய வீரசங்கிலி ஆகிய பகுதிகளில் உள்ள 3 அரசு மதுபான கடைகளில் இரண்டு நாட்களில் ரூ.30 லட்சத்திற்கும் அதிகமாக விற்பனை ஆகியுள்ளது. சாதாரண நாட்களில் இந்த கடைகளில் நாளொன்றுக்கு 10 ஆயிரம் ரூபாய் அளவுக்கு மட்டுமே மது விற்பனையாவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. மாநாடு நடந்து கொண்டிருந்தபோது பெரும்பாலான திமுக தொண்டர்கள் மதுபோதையில் இருந்திருப்பது தற்போது தெரியவருகிறது.