காக்கைகள் பயங்கரம்! ஆந்தையை கொத்திக் கொன்றது!

வெள்ளி, 3 ஜனவரி 2014 (17:09 IST)
அயல்நாட்டிலிருந்து வந்த பார்ன் இனத்தைச் சேர்ந்த ஆந்தை ஒன்றை 20க்கும் மேற்பட்ட காக்கைகள் கொத்திக் கொன்ற சம்பவம் தேனி மாவட்டம் போடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
FILE

போடியைச் சுற்றி வனப்பகுதிகள் அதிகம். இங்கு வெளிநாட்டுப்பறவைகள் இனப்பெருக்கத்திற்காக வருவது வழக்கம்.

இதில் அந்தமான் உள்ளிட்ட கடல்புறங்களில் இருக்கும் பார்ன் என்ற ஆந்தைக் குஞ்சு ஒன்று பகலில் கண் தெரியாத நிலையில் குலாலர்பாளையம் பகுதியில் பறந்து திரிந்தது.

இந்த ஆந்தைக் குஞ்சை 20க்கும் மேற்பட்ட காக்கைகள் விரட்டின. என்ன செய்வதென்று அறியாத அந்தக் காக்கை வீடு ஒன்றில் புகுந்தது.

வித்தியாசமாக இருந்த அந்த ஆந்தையைப் பார்க்க மக்கள் ஆங்காங்கேயிருந்து வந்தனர். இதனிடையே வனத்துறையினருக்கு தக்வல் தெரிவிக்கப்பட்டது.

வனத்துறையினர் வந்தபிறகு பொதுமக்களே ஆந்தையை பிடிக்க முயன்றனர். ஆனால் ஆந்தை மீண்டும் வெளியே பறந்தது.

இதற்காகவென்றே காத்திருந்த பயங்கரக் காக்கைகள் ஆந்தையை கொத்திச் சின்னாபின்னமாக்கி அது இறந்தே போய்விட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்