குடிபோதையில் மகளை ஆபாசமாகப் பார்க்கும் தந்தை! மகள் பரபரப்பு புகார்!

வெள்ளி, 3 ஜனவரி 2014 (13:31 IST)
FILE
சென்னையை அடுத்த திருவேற்காட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது தந்தை தன்னை ஆபாசமாகப் பார்ப்பதாக போலீஸில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

கப்பற்படையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அதிகாரி சார்லஸ் இவருக்கு வயது 61. ஒவர் ஓய்வு பெற்ற பிறகு தினமும் மது அருந்திக் கொண்டும் டிவியில் ஆபாசப்படம் பார்ப்பதுமாக இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் இவரது 21 வயதான மகள் தன்னையும் தன் தந்தை ஆபாசமாகப் பார்க்கிறார் என்று போலீசில் புகார் அளித்துள்ளார்.

அதாவது குடிபோதையில் தன்னை மகளாக அவர் பார்க்காமல் ஆபாசமாகவே பார்க்கிறார் இதனால் தான் கடும் மன உளைச்சலுக்கு ஆளானதாக அவர் போலீஸில் புகார் கொடுக்க, தற்போது சார்லஸ் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்