கள்ளக்காதலனுடன் ஓடிய மனைவி; கணவன் தற்கொலை

சனி, 31 ஆகஸ்ட் 2013 (16:48 IST)
கோவையில் மனைவி கள்ளக்காதலனுடன் ஓடியதால் மனமுடைந்து கணவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

மேட்டுப்பாளையம் பாரதி நகரை சேர்ந்தவர் ராஜன் (வயது 48). கூலித்தொழிலாளி. இவரது மனைவி ராதா. இவருக்கும் துரை என்பவருக்கும் நீண்ட நாட்களாக கள்ளக்காதல் இருந்து வந்தது.

இதை ராஜன் தட்டிக் கேட்டார். இருந்தாலும் ராதாவும், துரையும் சந்திப்பதை நிறுத்தவே இல்லை. சமீபத்தில் கள்ளக்காதல் ஜோடி ஊரை விட்டு ஓடியது. இதனால் ராஜன் அவமானம் அடைந்தார்.

நேற்று இரவு மதுவில் பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) கலந்து குடித்தார். சிறிது நேரத்தில் வாயில் நுரை தள்ளியபடி மயங்கி விழுந்தார். உயிருக்கு போராடிய ராஜனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ராஜன் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து மேட்டுப் பாளையம் சப்- இன்ஸ் பெக்டர் கார்த்திக், ஏட்டு ராயப்பன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்