மக்களின் குறைகளை தீர்க்காத அலுவலர்கள் மீது ஆட்சியர் நடவடிக்கை
திங்கள், 15 ஏப்ரல் 2013 (16:46 IST)
FILE
பொதுமக்களிடம் பெறப்படும் மனுக்கள் மீது உடனடியாக பரிசீலனை செய்யாத அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தலைமை வகித்து பேசுகையில், முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் பொதுமக்களிடம் பெறப்படும் மனுக்கள் மீது 15 நாள்களுக்குள் ஆய்வு செய்து தகுதியான மனுக்களுக்கு நலத்திட்டம் வழங்க வேண்டும். மனுக்கள் நடவடிக்கை எடுக்காத அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
இதுபோல், குறிப்பிட்ட நாட்களுக்குள் நடவடிக்கை மேற்கொள்ளாத அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களுக்கு உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உரிய பதிலை அளிக்க வேண்டும். இந்த மனுக்கள் குறித்து பதிவேடுகளில் சரியாக பதிவு செய்திருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.