இலங்கை தூதரை நாடு கடத்துமாறு ஜெயலலிதா கோரிக்கை

வெள்ளி, 29 மார்ச் 2013 (16:44 IST)
இந்தியாவிற்கான இலங்கை தூதர் பிரசாத் கரியவாசத்தை நாடு கடத்துமாறு தமிழக முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையைச் சேர்ந்த 71 சதவீதத்தினர் வட இந்திய தேசத்திலிருந்து புலம் பெயர்ந்து வந்தவர்களே, ஆகையால் இந்தியா 71 சதவீத சிங்கள மக்களுக்கே ஆதரவு அளிக்க வேண்டும் என்று ஒருங்கினைந்த இந்தியாவில் இன பிரிவை உண்டு செய்யும் முறையில் பேசினார்.

பிரசாத் காரியவாசத்தின் இந்த கூற்று சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாக இலங்கை தூதர் பிரசாத் காரியவசத்தை நாடு கடத்துமாறு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, இலங்கைக்கு இந்தியா பொருட்களை ஏற்றுமதி செய்யக் கூடாது எனவும் ஜெயலலிதா கோரியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்