ஜாதி நாயை நாட்டு நாய் கற்பழிப்பு - கோவை களேபரம்

புதன், 23 ஜனவரி 2013 (19:12 IST)
FILE
ஜாதி நாயநாட்டநாயகற்பழித்துவிட்டதாகாவலநிலையத்திலபுகாரகொடுக்கப்பட்டதாலகோவையிலபரபரப்பகிளம்பியது.

கோவை கவுண்டம்பாளையம் சரவணா நகரில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு உள்ளது. இதன் கீழ்தளத்தில் உள்ள வீட்டினர், வெளிநாட்டு நாய் ஒன்றை வளர்த்து வருகின்றனர். அதிக விலை கொடுத்து வாங்கியதால் மிக பத்திரமாக எப்போதும் கட்டியே வைத்திருப்பார்கள்.

மேல்தளத்தில் உள்ளவர்கள் நாட்டுநாய் ஒன்றை வளர்கின்றனர். நேற்று கீழ்வீட்டுக்காரர் வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, அவருடைய நாயும் மேல்வீட்டு நாயும் ஒன்றாக உல்லாசமாக இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

இதைப்பார்த்து ஆத்திரப்பட்ட அவர், கம்பை எடுத்து நாட்டு நாயை சரமாரியாக அடித்தார். அது அலறும் சத்தம் கேட்டு மேல்வீட்டிலிருந்த பெண் இறங்கி வந்தார். அவருக்கும் கீழ்வீட்டு உரிமையாளருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

நான் வளர்ப்பது ஜாதி நாய், சாதாரணமாக வெறும் சோறும் குழம்பும் ஊற்றி வளர்க்கவில்லை. மட்டன் போட்டு வளர்க்கிறேன். தினமும் சோப்பு, ஷாம்பு போட்டு குளிப்பாட்டி விடுகிறேன். ஊர் மேயும் உன் நாட்டு நாய்க்கு என் ஜாதி நாய் கேட்கிறதா? என்று கீழ்வீட்டுக்காரர் கத்தினார்.

மேல்வீட்டுப் பெண்ணும் விடவில்லை. நாய்கள் என்றால் அப்படித்தான் இருக்கும். உன்னுடையது ஜாதி நாய் என்றால் வீட்டுக்குள்ளேயே வைத்திருக்க வேண்டியது தானே? வெளியே விட்டது உன் தப்பு, ஊசி இடம்கொடுக்காமல் நூல் நுழையுமா? என்றார். ஒருமையில் பேசிக் கொண்டதால் சண்டை வலுத்து கூட்டம் கூடியது.

இருவரும் நாய்களுடன் துடியலூர் காவல் நிலையத்திற்கு வந்தனர். நாட்டு நாய் மீது கற்பழிப்பு வழக்குப் போட வேண்டும் என்று கீழ்வீட்டுக்காரர் சொல்ல, நாட்டு நாயைத் தாக்கியதாக வழக்குப் போட வேண்டும் என்று மேல்வீட்டுப் பெண் சொல்ல, காவல் நிலையமே களேபரமானது.

இந்த விநோதமான வழக்கால் காவல்துறையினர் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் எவ்வளவு சமாதானம் சொல்லியும் பலனில்லை. நாய் பிரச்சனையை இதோடு விடப்போவதில்லை என்று அப்போதைக்கு கலைந்து சென்றனர்.

நாயை ஐந்தறிவுப் பிராணி என்று சொல்லுகிறோம். இந்த தகவலைப் பார்க்கும் போது ஐந்தறிவு நாய்க்கு மட்டும் தானா? என்று எண்ணத் தோன்றுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்