×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
புறநகர் ரயில், சீசன் டிக்கெட் புதிய கட்டணம் எவ்வளவு
புதன், 23 ஜனவரி 2013 (16:35 IST)
FILE
மத்திய அரசு உயர்த்திய ரயில் கட்டணம் நேற்று முதல் அமலுக்கு வந்தது. சென்னை புறநகர் மின்சார ரயில், சீசன் டிக்கெட்டுகளுக்கான புதிய கட்டண விவரத்தை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.
அதன்படி, சென்னை எழும்பூரில் இருந்து கடற்கரை, பல்லாவரத்துக்கு செல்ல 5 ரூபாய். சிறியவர்களுக்கும் 5 ரூபாய்தான்.
ஆனால் எழும்பூரில் இருந்து குரோம்பேட்டை, மறைமலைநகருக்கு செல்ல 10 ரூபாய். அப்படியே இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. சிறுவர்களுக்கு 5 ரூபாய்.
எழும்பூரில் இருந்து சிங்கப்பெருமாள் கோவில், செங்கல்பட்டுக்கு 15 ரூபாய். சிறுவர்களுக்கு 10 ரூபாய்.
மேலும், சீசன் டிக்கெட் விலையும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி எழும்பூரில் இருந்து கடற்கரை, பல்லாவரம் செல்ல ஒரு மாதத்துக்கு 85 ரூபாய். 3 மாதத்துக்கு 230 ரூபாய்.
எழும்பூரில் இருந்து குரோம்பேட்டை, மறைமலைநகர் செல்ல மாதம் 160 ரூபாய். 3 மாதத்திற்கு 435 ரூபாய்.
எழும்பூரில் இருந்து சிங்கப்பெருமாள் கோவில், செங்கல்பட்டு செல்ல மாதம் 235 ரூபாய். 3 மாதத்திற்கு 635 ரூபாய்.
சென்னை சென்ட்ரல் மற்றும் கடற்கரையில் இருந்து வியாசர்பாடி, அன்னனூர், ராயபுரம், கத்திவாக்கம், மந்தவெளிக்கு 5 ரூபாய். சிறியவர்களுக்கும் 5 ரூபாய்.
சென்ட்ரல் மற்றும் கடற்கரையில் இருந்து வேளச்சேரிக்கு 10 ரூபாய். சிறியவர்களுக்கு 5 ரூபாய்.
இதேபோல் சென்ட்ரல் மற்றும் கடற்கரையில் இருந்து வியாசர்பாடி, அன்னனூர், ராயபுரம், கத்திவாக்கம், மந்தவெளி செல்ல மாத சீசன் டிக்கெட் 85 ரூபாய். 3 மாதத்திற்கு 230 ரூபாய்.
சென்ட்ரல் மற்றும் கடற்கரையில் இருந்து வேளச்சேரிக்கு செல்ல மாத சீசன் டிக்கெட் 180 ரூபாய். 3 மாதத்திற்கு 495 ரூபாய்.
ரயில் கட்டணம் உயர்விற்கு முன் ஏற்கனவே சீசன் டிக்கெட் எடுத்தவர்கள் அதற்கான கூடுதல் கட்டணத்தை எதுவும் செலுத்த தேவையில்லை என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
புறநகர் ரயில்களுக்கு கிலோ மீட்டருக்கு 2 பைசாதான் உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சால் கூறினார். ஆனால், தற்போது, புதிய கட்டண உயர்வுக்கும், அறிவிப்புக்கும் சம்பந்தம் இல்லாமல் இருக்கிறது. இதனால் பயணிகள் கூடுதல் கட்டணத்தை செலுத்த வேண்டியுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
LIVE: Delhi Election Results 2025 : டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2025: நேரலை!
மொத்த வாக்காளர்களை விட, பதிவான வாக்குகள் அதிகமானது எப்படி?ராகுல் காந்தி கேள்வி
ஸ்டாலின் அல்வா கடை, அண்ணா அறிவாலயம்.. அண்ணாமலையின் பதிவு வைரல்..!
பிரான்ஸ் AI உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி.. அதிபர் மேக்ரானுடன் தலைமை தாங்குகிறார்..!
ரிசல்ட்டுக்கு முன்பே பேரம்.. கட்சி மாறினால் ரூ.15 கோடி.. பாஜக மீது ஆம் ஆத்மி புகார்..!
செயலியில் பார்க்க
x