பிறந்து ஒரு நாளேயான குழந்தை மண்ணிலிருந்து மீட்கப்பட்ட சம்பவம் தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அய்யம்பட்டி கிராமத்தில் தென்னை தோப்பு ஒன்றில் திடீரென குழந்தையின் தொடர் அழு குரல் கேட்டதையடுத்து அப்பகுதி மக்கள் அங்கு சென்று பார்த்தனர்.
அப்போது, குழந்தை ஒன்று மண்ணால் மூடப்பட்ட நிலையில் இருப்பதை கண்டு அதனை மீட்டனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அந்த ஆண் குழந்தைக்கு சின்னமனூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
குழந்தையின் உடல்நிலை தேறி வருவதாகவும், மேல்சிகிச்சைக்காக குழந்தை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இன்று கொண்டு செல்லப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு குழந்தையின் வயிற்றில் மணல் உள்ளதா என்று சோதிப்பட்டு பின்னர் சமூக நலத்துறை அதிகாரிகளிடம் குழந்தைகள் ஒப்படைக்கப்பட்டது.