மதுரையில் நான்கு வழிச்சாலைகள் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
வெள்ளி, 2 மார்ச் 2012 (11:09 IST)
மதுரையில் நான்கு வழி சாலைகள் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மதுரை - ராமநாதபுரம், தஞ்சாவூர் - விக்கிரவாண்டி, இடையே நான்கு வழி சாலைகள் அமைக்கப்படுகின்றன.
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்ற, உள் கட்டமைப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் திட்ட மதிப்பீடு ரூ. 2230 கோடிஆகும்.
அமைச்சரவை கூட்டத்தில், உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் சி.பி. ஜோஷி, திட்டக்குழு துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா, ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி ஆகியோர் கலந்து கொண்டனர்.