த‌மிழக அரசு ‌மீது வழ‌க்கு தொடருவே‌ன்: சு‌ப்பிரமணிய சாமி

வியாழன், 23 ஜூன் 2011 (12:04 IST)
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் குடும்ப சொத்து தொடர்பாக ஆகஸ்டு 15ஆ‌ம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழக அரசு மீது வழக்கு தொடருவேன் எ‌ன்று ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமி கூ‌றியு‌ள்ளா‌ர்.

சென்னையில் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய அவ‌ர், 2008ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு, 1,405 சிறைக்கைதிகள் கருணை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டவ‌ர்க‌ளி‌ல் பலபேர் மிகப்பெரிய கொலை குற்றங்களை செய்தவர்கள் எ‌ன்று அவ‌ர் கூ‌றினா‌ர்.

தற்போது, வெளியில் உள்ள அவர்கள் மீண்டும் கொலை குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றனர் எ‌ன்று‌ம் எனவே, அவர்களை மீண்டும் சிறையில் அடைக்க வேண்டும் எ‌ன முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதியுள்ளேன் எ‌ன்று‌ம் சு‌ப்‌பிரம‌ணியசா‌மி தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில், மத்திய அமை‌ச்ச‌ர் ப.சிதம்பரமும் சம்பந்தப்பட்டுள்ளதா‌ல் அவரை அமை‌ச்ச‌ர் பதவியில் இருந்து பிரதமர் மன்மோகன் சிங் நீக்க வேண்டும் எ‌ன்று‌ம் அவ‌ர் வ‌லியுறு‌த்‌தினா‌ர்.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் குடும்ப சொத்து தொடர்பாக, தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எ‌ன்று‌ம் ஆகஸ்டு 15ஆ‌ம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழக அரசு மீது வழக்கு தொடருவேன் ‌எ‌ன்று‌ம் சு‌ப்‌பிரம‌ணிய சா‌மி கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்