தமிழக மீனவர்களுக்கு நிலையான பாதுகாப்பு கிடைத்திட தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த தமிழக மீனவர்கள் 23 பேரை 5 படகுகளுடன் சிங்கள கடற்படையினர் சிறைப்பிடித்துள்ளனர். இவர்களை விடுவிப்பதற்கு அ.தி.மு.க. அரசு உரிய அழுத்தம் கொடுத்து இந்திய அரசை விரைந்து செயல்பட வைக்க ஆவன செய்யவேண்டும்.
தமிழக மீனவர்களுக்கு நிலையான பாதுகாப்பு கிடைத்திடவும் உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசை விடுதலைசிறுத்தைகள் கேட்டுக்கொள்கிறது. அத்துடன் வரும் 23ஆம் தேதி சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் பன்னாட்டு உபயோகப் பொருட்காட்சியில் சிங்களர்களின் உற்பத்தி பொருட்களும் இடம்பெறுகின்றன.
சிங்கள அரசு மீது பொருளாதார தடை விதிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிற தமிழக அரசு, இந்த கண்காட்சியில் சிங்களர்களின் உற்பத்திப் பொருட்கள் இடம்பெற அனுமதிக்க கூடாது என்று தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.