அரசு பள்ளியில் மகளை சேர்த்து அசத்திய ஈரோடு ஆ‌ட்‌சிய‌ர்

வியாழன், 16 ஜூன் 2011 (16:35 IST)
webdunia photo
WD
இரண்டாம் வகுப்பு படிக்கும் தன் மகளை அரசு ஊராட்சி பள்ளியில் சேர்த்தார். மேலும் மதிய உணவும், சீருடையும் வழங்கவேண்டும் என பள்ளி தலைமை ஆசிரியரிடம் வேண்டுகோள் வைத்தார்.

அரசு பள்ளியில் தங்கள் குழந்தைகள் படிப்பது தனக்கு கௌரவம் இல்லை. தனியார் பள்ளியில் படித்தால் மட்டுமே தனக்கும் தன் குழந்தைக்கும் கௌரவம் என்று மக்கள் எண்ணிக்கொண்டுள்ள நிலை அதிகரித்து வருகிறது. அதன் எதிரொலியாகத்தான் தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை வருடம், வருடம் அதிகரித்து வருகிறது.

தனியார் பள்ளியில் பல லட்சம் கொடுத்து சேர்க்க வேண்டிய நிலையும் தொடர்கிறது. அதே சமயம் அரசு பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது என்றால் இதை யாரும் மறுக்க முடியாது.

இந்த நிலையில் ஈரோடு ஆ‌ட்‌‌சிய‌ர் அனந்தகுமார் தன் மகளை அரசு யூனியன் பள்ளியில் இரண்டாம் வகுப்பில் சேர்த்து அரசு வழங்கும் மதிய உணவு, சீருடைகள் தன் மகளுக்கு வழங்குமாறு பள்ளி தலைமை ஆசிரியரிடம் கேட்டுள்ளது அதிசயமாக உள்ளது.

ஈரோடு ஆ‌ட்‌சியராக இருப்பவர் அனந்தகுமார். இவடைய மனைவி ஸ்ரீவித்யா இந்த தம்பதிகளுக்கு கோபிகா (7), தீபிகா (2)ஆகிய இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர் இதற்கு முன் தர்மபுரி மாவட்டத்தில் ஆ‌ட்‌சியராக பணியாற்றி வந்தார். அங்கு தன் மகள் கோபிகா முதல் வகுப்பு தனியார் பள்ளியில் படித்து வந்தார். தற்போது ஈரோடு மாறுதல் ஆகிவிட்டதால் தன் குடும்பத்துடன் ஈரோட்டிற்கு குடியேறி விட்டார். இவர் வந்தவுடன் சத்தியமங்கலத்தில் நடந்த ஜமாபந்தியில் பொதுமக்களுக்கு இடையில் சென்று நின்றுகொண்டு மக்களிடம் இவரே நேரடியாக மனு பெற்று மக்களிடம் நற்பெயர் ஈட்டினார்.

webdunia photo
WD
இதையடுத்து நேற்று தன் மகள் கோபிகாவை ஈரோடு ஆ‌ட்‌‌சிய‌ர் அலுவலகம் அருகே உள்ள குமலன்குட்டை யூனியன் தொடக்கப்பள்ளியில் இரண்டாம் வகுப்பில் சேர்த்த சென்றார். இவரை பார்த்த பள்ளி தலைமை ஆசிரியை ராணி ஆ‌ட்‌‌சிய‌ர் ஆய்வு செய்யத்தான் வந்துள்ளார் என்று எண்ணி அவர் அறைக்கு அழைத்து அவர் இருக்கையில் அமர சொன்னார். அதற்கு ஆ‌ட்‌‌சிய‌ர் அனந்தகுமார் தன் மகளை இரண்டாம் வகுப்பில் சேர்‌க்க வேண்டும் என்றார்.

அதிர்சியிலும், ஆச்சரியத்திலும் மூழ்கிய தலைமை ஆசிரியை உடனே சேர்க்கைக்கான விண்ணப்பத்தை கொடுத்தார். அந்த விண்ணப்பத்தை ஆ‌ட்‌சிய‌ர் அனந்தகுமார் எவ்வித பரபரப்புமின்றி பூர்த்தி செய்தார். பின் தன் குழந்தைக்கு அரசு வழங்கும் சீருடை வழங்குமாறு கேட்டார்.
webdunia photo
WD
அதற்கு தலைமை ஆசிரியை ராணி மதிய உணவு சாப்பிடுபவர்களுக்கு மட்டுமே இலவச சீருடை என்றார். உடனே என் மகளுக்கும் மதிய உணவு கொடுங்கள் என்று ஆ‌ட்‌‌சிய‌ர் அனந்தகுமார் கூறியது அங்கிருந்த அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.


ஒரு அரசு அலுவலகத்தில் பணியாற்றும் கடைநிலை ஊழியரே தன் குழந்தையை கான்வென்டில் படிக்க வைக்கும் நிலையில் ஒரு ஆ‌ட்‌‌சிய‌ர் தன் குழந்தையை அரசு பள்ளியில் சேர்த்துள்ளது இப்பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்து ஆ‌ட்‌‌‌சிய‌ர் அனந்தகுமாரிடம் கேட்டபோது, இது என் சொந்த விருப்பம் என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்