சிறுநீரக சிகிச்சைக்காக நடிகர் ரஜினிகாந்த் இன்று இரவு சிங்கப்பூர் செல்கிறார். இதற்காக, ஆம்புலன்ஸ் போன்ற தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.
மூச்சுக்குழாய் தொற்று, குடல் நோய் மற்றும் சிறுநீரக கோளாறு காரணமாக நடிகர் ரஜினிகாந்த் கடந்த 13ஆம் தேதி சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் சிறுநீரக பாதிப்புக்கு விரைவான சிகிச்சை பெறுவதற்காக, ரஜினிகாந்த் லண்டன், அமெரிக்கா, சிங்கப்பூர் ஆகிய 3 நாடுகளில் ஏதாவது ஒரு நாட்டுக்கு செல்கிறார் என்று முதலில் திட்டமிடப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் ரஜினிகாந்த் இன்று இரவு 11.45 மணிக்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் புறப்பட்டு செல்கிறார். இதற்காக, ஆம்புலன்ஸ் போன்ற தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.