எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரி ஆசிரியர்கள் 4 பேர் சிறையில் அடைப்பு
வெள்ளி, 4 பிப்ரவரி 2011 (15:59 IST)
கல்லூரி மாணவி தற்கொலைக்கு காரணமாக இருந்ததாக கூறி கைது செய்யப்பட்டுள்ள எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கல்லூரி ஆசிரியர்கள் 4 பேர் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கல்லூரியில் பி.காம் 3ஆம் ஆண்டு படித்து வந்த பெசன்ட் நகர் ஆல்காட் குப்பத்தை சேர்ந்த மாணவி திவ்யா கடந்த 31ஆம் தேதி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நேற்று முன்தினம் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு 4 பேரையும் சிறையில் அடைப்பதற்காக காவல்துறையினர் வேனில் அழைத்து சென்றனர்.
அப்போது 4 பேருக்கும் ஒரே நேரத்தில் நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் அனைவரும் சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
காவல்துறை பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த அவர்கள் 4 பேரும் இன்று பிற்பகலில் சிகிச்சை முடிந்து பலத்த பாதுகாப்புடன் வேனில் அழைத்துச் செல்லப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.