தடையா‌ல் மண‌ல் ‌விலை உயராது: ந‌ல்லக‌ண்ணு

சனி, 4 டிசம்பர் 2010 (11:57 IST)
செ‌ன்னை: தா‌‌மிரபர‌ணி‌யி‌ல் மண‌ல் அ‌ல்ல உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் ‌வி‌தி‌த்து‌ள்ள தடையை அம‌ல்படு‌த்த து‌ரித நடவடி‌க்கை எடு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று வ‌லியுறு‌த்‌தியு‌ள்ள இ‌ந்‌திய க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி‌யி‌ன் தே‌சிய க‌ட்டு‌ப்பா‌ட்டு குழு‌த் தலைவ‌ர் ந‌ல்லக‌ண்ணு, மண‌ல் அ‌ள்ள தடை ‌வி‌தி‌ப்பதா‌ல் ‌அத‌ன் விலை உய‌‌ர்‌ந்து‌விடுவதாக சொ‌ல்வதை ஏ‌ற்க முடியாது எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர்.

நெ‌ல்லை‌யி‌ல் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய அ‌வ‌ர், தா‌மிரபர‌ணி ஆ‌ற்‌றி‌ல் வரும‌் 5 ஆ‌ண்டுகளு‌க்கு மண‌ல் அ‌ள்ள உய‌ர் ‌‌‌நீ‌திம‌ன்ற‌ம் ‌வி‌தி‌த்து‌ள்ள தடையை தா‌ம் வரவே‌ற்பதாக தெர‌ி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

மா‌நில‌ம் முழுவது‌ம் மண‌ல் அ‌ள்ளுவதை க‌ண்கா‌ணி‌க்க குழு அமை‌க்க உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளதை சு‌ட்டி‌க்கா‌ட்டியு‌ள்ள அவ‌ர், அ‌ந்த உ‌த்தரவை அம‌ல்படு‌த்த அரசு ‌விரை‌ந்து நடவடி‌க்கை எடு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்றா‌ர்.

தா‌மிரப‌ணி‌யி‌ல் மண‌ல் அ‌ள்ள‌ி வ‌ந்தவ‌ர்‌க‌ள் ‌மீது கடு‌ம் நடவடி‌க்கை எடு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று ந‌ல்லக‌ண்ணு வ‌‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

ஆ‌ற்‌றி‌ல் மண‌ல் அ‌ள்ள தடை ‌வி‌தி‌ப்பதா‌ல் ‌அத‌ன் விலை உய‌‌ர்‌ந்து‌விடுவதாக சொ‌ல்வதை ஏ‌ற்க முடியாது எ‌ன்று கூ‌றிய அவ‌ர், ‌சிமெ‌ண்‌ட் ‌விலை இர‌ண்டு மட‌ங்கா‌கி இரு‌ப்பது ஏ‌ன் எ‌‌ன கே‌ள்‌வி எழு‌ப்‌பியு‌ள்ளா‌ர்.

அளவு‌க்கு அ‌திகமாக மண‌ல் அ‌ள்ள‌ப்படுவது கு‌றி‌த்து ம‌க்க‌ளிடமு‌ம் ‌வி‌ழி‌ப்புண‌ர்வு ஏ‌ற்படு‌த்த‌ப்படுவது அவ‌சிய‌ம் எ‌ன்று‌ம் ந‌ல்லக‌ண்ணு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்