சென்னையில் மின்வாரிய அதிகாரி ஒருவரை பெண் காவலர் ஒருவர் எரித்து கொலை செய்துள்ள நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வேளச்சேரி நேரு நகரை சேர்ந்த ராஜேந்திரன் (35) பெருங்குடியில் உள்ள மின்சார வாரியத்தில் மின் கணக்கீட்டாளராக வேலை பார்த்து வருகிறார். இவரை கடந்த மார்ச் மாதம் 31ஆம் தேதி முதல் காணவில்லை. இது குறித்து அவரது தாய் செல்லம்மாள் வேளச்சேரி காவல்துறையில் புகார் செய்தார். இது பற்றி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையில் ராஜேந்திரனுக்கும், வடபழனி பெண் காவலர் சாஸ்திரகனிக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. பெண் காவலர் சாஸ்திரகனி, திருமணம் ஆகி கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இதேபோல காணாமல் போன ராஜேந்திரனும் திருமணம் ஆகி மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். இதனால் ராஜேந்திரனும், பெண் காவலர் சாஸ்திரகனியும் அடிக்கடி தனிமையில் சந்தித்து தங்கள் கள்ளக்காதலை வளர்த்தனர்.
காணாமல் போன ராஜேந்திரன், பெண் காவலர் சாஸ்திரகனி வீட்டுக்கு அடிக்கடி வந்து தங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் மின்வாரிய அதிகாரி திடீர் என்று காணாமல் போய் உள்ளார். இது காவல்துறை அதிகாரிகளுக்கு சாஸ்திரகனி மீது சந்தேகத்தை ஏற்படுத்தியது.