செ‌ன்னை‌யி‌ல் ‌சிறுவ‌ர்க‌‌ள் ‌சி‌த்ரவதை: மதபோதக‌ர் கைது

வியாழன், 18 மார்ச் 2010 (16:11 IST)
செ‌ன்னையை அடு‌த்த செ‌ம்ம‌ஞ்சே‌ரி‌யி‌ல் ம‌ணி‌ப்பூ‌ர் ‌சிறுவ‌ர்களை ‌சி‌த்ரவதை செ‌ய்ததாக வ‌ந்த புகாரையடு‌த்து மதபோதகரை காவ‌ல்துறை‌யின‌ர் கைது செ‌ய்து‌ள்ளன‌ர்.

செ‌ம்ம‌ஞ்சே‌ரி‌யி‌ல் அனாதை இ‌ல்லம் நட‌த்‌தி வ‌ருபவ‌ர் ‌மதபோதக‌ர் கி‌றி‌ஸ்டோப‌ர். இவ‌ர் ‌மீது ‌சிறுவ‌ர்களு‌க்கு க‌‌ல்‌வி அ‌ளி‌ப்பதாக கூ‌றி ‌‌மோசடி செ‌ய்ததாக புகா‌ர் கூற‌ப்ப‌ட்டது.

இதையடு‌த்து காவ‌ல்துறை‌யின‌ர் நட‌த்‌தி ‌விசாரணை‌யி‌ல் போதக‌ர் ‌கி‌றி‌ஸ்டோப‌ர் மோசடி செ‌ய்தது தெ‌‌ரியவ‌ந்தது. இதை‌த் தொட‌ர்‌ந்து அவரை காவ‌ல்துறை‌யின‌ர் இ‌ன்று கைது செ‌ய்தன‌ர்.

இதே புகா‌ரி‌ன் பே‌‌ரி‌ல் பா‌தி‌ரியா‌ர் இ‌ம்மானுவே‌ல் உ‌ள்பட 4 பே‌ரு‌ம், க‌ளிய‌க்கா‌விளை‌யி‌ல் அனாதை இ‌ல்ல‌‌ம் நட‌த்‌‌தி மோசடி செ‌ய்த மதபோதக‌ர் ஒருவ‌ரு‌ம் ஏ‌ற்கனவே கைது செ‌ய்ய‌ப்‌ப‌ட்டு‌ள்ளன‌ர் எ‌ன்பது ‌நினை‌வி‌ல் கொ‌ள்ள‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்