நடிகை காயத்ரி ரகுராம் விவாகரத்து கோரி மனு

செவ்வாய், 10 நவம்பர் 2009 (15:51 IST)
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்ட நடிகை காயத்ரி ரகுராம், விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் இன்று மனுத்தாக்கல் செய்துள்ளார்.

நடன இயக்குனர் ரகுராமின் மகளான காயத்ரிக்கும், அமெரிக்காவில் வசித்து வரும் மென்பொருள் பொறியாளரான தீபக் சந்திரசேகருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் சென்னையில் திருமணம் நடந்தது. இந்நிலையில் இன்று காயத்ரி ரகுராம் விவாகரத்துக் கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார்.

விசில், சார்லி சாப்ளின் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் நடிகை காயத்ரி ரகுராம் பிரபலமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்