பிளஸ்2 சிறப்பு துணைத்தேர்வு முடிவு இன்று வெ‌ளி‌யீடு

செவ்வாய், 28 ஜூலை 2009 (08:53 IST)
பிளஸ்2 தே‌ர்‌வி‌ல் தே‌ர்‌வி‌ல் தோ‌ல்‌வி அடை‌ந்த மாணவர்கள் எழுதிய சிறப்புத் துணைத்தேர்வின் முடிவு இன்று இணையதளத்தில் வெளியிடப்படுகிறது எ‌ன்று அரசு தேர்வுகள் இயக்குனர் டி.வசுந்தராதேவி தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இது தொ‌ட‌ர்பாக அவ‌ர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்த ஆண்டு பிளஸ்2 தே‌ர்‌வி‌ல் தோ‌ல்‌வி அடை‌ந்த மாணவ-மாணவிகளுக்கு கடந்த ூன், ஜூலை மாதம் சிறப்பு துணைத்தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வின் முடிவு பின்வரும் இணையதளங்களில் இன்று காலை வெளியிடப்படுகிறது.

www.pallikalvi.in
www.dge1.tn.nic.in
www.dge2.tn.nic.in
www.dge3.tn.nic.in

த‌னித்தேர்வர்கள் மதிப்பெண் பட்டியலை வரு‌ம் 30ஆ‌ம் தேதி பிற்பகல், தேர்வு எழுதிய மையங்களில் நேரில் பெற்றுக்கொள்ளலாம். தட்கல் திட்டத்தில் தேர்வு எழுதியவர்களுக்கு அவர்களின் வீட்டு முகவரிக்கு பதிவு அஞ்சலில் அனுப்பிவைக்கப்படும். சிறப்பு துணைத்தேர்வு எழுதியவர்கள் ஜெராக்ஸ், மறுகூட்டலுக்கும் விண்ணப்பிக்கலாம்.

விடைத்தாள் ஜெராக்ஸ் பெறுவதற்கான விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 3ஆ‌ம் தேதி முதல் அனைத்து முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்கள், மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகங்கள், அரசு தேர்வுகள் மண்டல துணை இயக்குனர் அலுவலகங்களில் கிடைக்கும். இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகஸ்ட் 5ஆ‌ம் தேதி ஆகு‌ம் எ‌ன்று தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்