ஸ்ரீபெரும்புதூர் தொகுதி தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு வெற்றியை எதிர்த்து பா.ம.க.வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செயதுள்ள மனுவில், ''ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் தி.மு.க. சார்பில் டி.ஆர்.பாலுவும், பா.ம.க. சார்பில் நானும் போட்டியிட்டோம். தேர்தலில் தில்லுமுல்லு செய்து டி.ஆர்.பாலு வெற்றி பெற்றார். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
11 லட்சம் வாக்காளர்களுக்கு சாதனை புத்தகம் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.2 கோடி செலவிடப்பட்டது. தேர்தல் ஆணையம் நிர்ணயித்த தொகையை விட அதிகமாக செலவு செய்துள்ளார். வாக்குப்பதிவு எந்திரத்திலும் வேறுபாடு ஏற்பட்டது. இதனால் டி.ஆர்.பாலு வெற்றி பெற்றதை செல்லாது என்று அறிவிக்க வேண்டும்'' என்று மனுவில் கூறியுள்ளார்.