மே மாத முதல் வாரத்தில் மழை

வியாழன், 30 ஏப்ரல் 2009 (15:22 IST)
மே மாதம் 2ஆம் தேதி முதல் தென் தமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்கள் உட்பட சில இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று மழை ராஜ் கணித்து கூறியுள்ளார்.

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மழை ராஜ், மேகங்களை வைத்து மழை பற்றி ஆய்வு நடத்தி தமிழ்.வெப்துனியா.காமிற்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில், ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி கணிப்பின்படி மே மாதம் 2ஆம் தேதி முதல் தென் தமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்கள் உட்பட சில இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் தென்மேற்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் வாய்ப்புள்ளதால் மே மாதம் 7ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரையும், 15ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரையும் தமிழக கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும்.

தமிழகத்தின் இதர மாவட்டங்களில் மிதமானது முதல் பலத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் நிலநடுக்க தேதியின் கணிப்பின்படி மே மாதம் 15 மற்றும் 26 ஆகிய தேதிகளில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்