மக்களவை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கு சிதம்பரம், விழுப்புரம் ஆகிய இரண்டு தொகுதிகளை முதலமைச்சர் கருணாநிதி ஒதுக்கினார்.
இந்த இரண்டு தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை இன்று அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்தார். அதன்படி சிதம்பரம் தனி தொகுதியில் தொல்.திருமாவளவனும், விழுப்புரம் தனி தொகுதியில் எஸ்.பி.வேலாயுதமும் போட்டியிடுகின்றனர்.
இதைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கையும் திருமாவளவன் வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், 40 தொகுதிகளில் எங்கள் கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என்றார்.