மார்ச் மாதம் 21ஆம் தேதியின் வானிலை கணிப்பின்படி தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் வாய்ப்புள்ளது என்று மழை ராஜ் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மழை ராஜ் என்பவர் மழை பற்றி கணித்து தமிழ்.வெப்துனியா.காம்மிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில், மார்ச் மாதம் 21ஆம் தேதியின் வானிலை கணிப்பின்படி தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் வாய்ப்புள்ளது.
இதன் காரணமாக மார்ச் 23ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை பெரும்பாலான நாட்கள் நாகை, தஞ்சை, பாண்டிச்சேரி, கடலூர், சென்னை உட்பட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மிதமானது முதல் பலத்த மழையும், தமிழகத்தின் இதர பகுதிகளில் மிதமான மழையும், ஒரு சில இடங்களில் பலத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்று மழை ராஜ் தெரிவித்துள்ளார்.