தீக்குளிப்பில் யாரும் ஈடுபட வேண்டாம் : பழ.நெடுமாறன் வேண்டுகோள்

திங்கள், 23 மார்ச் 2009 (11:58 IST)
ஈழ‌த் த‌மிழ‌ர்களு‌க்காக யாரு‌ம் த‌ீ‌க்கு‌ளி‌ப்பு போ‌ன்ற நடவடி‌க்கை‌யி‌ல் ஈடுபட வே‌ண்டா‌ம் எ‌ன்று இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் வே‌ண்டுகோ‌ள் ‌விடு‌த்து‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுக்கோட்டை- கொத்தமங்கலத்தில் தே.மு.தி.க. தொண்டர் பாலசுந்தரம் ஈழத் தமிழருக்காக தீக்குளித்து இறந்த செய்தியறிய மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

தமிழக இளைஞர்கள் கட்சி வேறுபாடின்றி ஈழத் தமிழர்களுக்காக தங்கள் இன்னுயிரையும் தியாகம் செய்ய தயாராக உள்ளனர் என்பதையே பாலசுந்தரத்தின் ஈகம் காட்டுகிறது.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பாக எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். தீக்குளிப்பு போன்ற நடவடிக்கைகளில் யாரும் ஈடுபட வேண்டாம் என மீண்டும் மீண்டும் வேண்டி கேட்டு‌க் கொள்கிறேன் எ‌ன்று பழ.நெடுமாறன் வே‌ண்டுகோ‌ள் ‌விடு‌த்து‌ள்ளா‌ர்.