இந்த இரண்டு வழக்குகளிலும் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ராஜகோபால் உள்ளிட்டவர்கள் அப்பீல் மனு தாக்கல் செய்தனர்.
அதே சமயம் அரசு தரப்பில், 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையை ஆயுள் தண்டனையாக அதிகரிக்க வேண்டும் என்று அப்பீல் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை முடிந்து தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டிருந்தது.
குற்றவாளிகளுக்கு இபிகோ 302 வது பிரிவின்படி( கொலை ) தண்டனை வழங்காமல், தண்டனை வழங்கியதில் கீழ் நீதிமன்றம் தவறிழைத்து விட்டதாகவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் ராஜகோபால் தெளிவான நோக்கத்துடன் பயங்கர குற்றத்தை இழைத்திருப்பதாகவும், இது மன்னிக்க முடியாத குற்றம் என்றும் நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டனர்.