மும்பை தாக்குதல் போன்று எதிர்காலத்தில் தாக்குதல் ஏதும் நடத்தப்பட்டால், இந்தியா உரிய பதிலடி கொடுக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியிருக்கிறார்.
காரைக்குடியை அடுத்த கீழசேவல்பட்டி கிராமத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அவர், தாம் உள்துறை அமைச்சர் பொறுப்பேற்ற பின் நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.
கடந்த 5 மாத காலத்தில் முக்கிய நகரங்கள் மட்டுமல்லாது அனைத்துப் பகுதிகளிலும் தீவிர பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருவதாக ப. சிதம்பரம் கூறினார்.
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை காரணமாகவே மும்பை தாக்குதல் தங்கள் மண்ணிலிருந்து திட்டமிடப்பட்டதாக பாகிஸ்தான் ஒப்புக் கொண்டதாக அவர் கூறினார்.
மும்பை தாக்குதல் போன்று எதிர்காலத்தில் தாக்குதல் நடத்தப்படுமானால், இந்தியா உரிய பதிலடியைக் கொடுக்கும் என்றும் ப. சிதம்பரம் கூறினார்.
பாஜக-வை இந்துத்துவா கட்சி என விமர்சித்த ப. சிதம்பரம், தலித்துகள், சிறுபான்மையினதர் மற்றும் இதர பிற்பட்ட வகுப்பினரைப் பற்றி முந்தைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கவலைப்படவில்லை என்றார்.