ஈழ‌த் ‌த‌மிழ‌ர்களு‌க்காக ச‌ர்வ க‌ட்‌சிகளு‌ம் இணை‌ந்து குர‌ல் கொடு‌க்க வே‌ண்டு‌ம் : சர‌த்குமா‌ர்

திங்கள், 9 மார்ச் 2009 (09:50 IST)
தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் தங்களிடையே இருக்கிற வேறுபாடுகளை களைந்து ஒருங்கிணைந்து தங்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஈழத் தமிழரிடையே இருந்து வருகிறது எ‌ன்று தெ‌ரி‌வி‌த்து‌ள்ள அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், அ.தி.மு.க. அறிவித்திருக்கும் போராட்டத்தின் மூலம் அதற்கான காலம் கனிந்திருக்கிறது எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வலியுறுத்தி தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் தொடர்ந்து குரல் கொடுத்து போராடி வருகின்றன. தமிழக முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டம், அந்த கூட்டத்தில் தீர்மானித்தபடி போராட்டங்கள், பிரதமர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம், பிறகு தனித்தனியே ஒவ்வொரு கட்சியும் நடத்திய போராட்டங்கள் என பலவகையிலும் தமிழக அரசியல் கட்சிகள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தி வந்திருக்கின்றன.

தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் அரசியல் வேறுபாடுகளை களைந்துவிட்டு ஒட்டுமொத்தமாக ஒருங்கிணைந்து போராட வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

தற்போது அ.தி.மு.க. பொது செயலர் ஜெயலலிதா, ஈழத்தில் போர் நிறுத்தம் ஏற்பட வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் அறிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. 10 ஆண்டு காலம் முதலமைச்சராக இருந்து, தற்போது தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சி தலைவராகவும் திகழ்ந்து வரும் ஜெயலலிதா, இலங்கை தமிழருக்காக உணர்வுப்பூர்வமாக உண்ணாவிரத போராட்டம் நடத்த இருப்பதை அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் பாராட்டி வரவேற்கிறோம்.

தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் தங்களிடையே இருக்கிற வேறுபாடுகளை களைந்து ஒருங்கிணைந்து தங்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஈழத் தமிழரிடையே இருந்து வருகிறது. அ.தி.மு.க. அறிவித்திருக்கும் போராட்டத்தின் மூலம் அதற்கான காலம் கனிந்திருக்கிறது என்றே நம்பலாம் எ‌ன்று சர‌த்குமா‌ர் கூ‌றியு‌ள்ளா‌ர்.