சீனா போன்று அதிவேக ரயில்கள்- ஆர்.வேலு

ஞாயிறு, 22 பிப்ரவரி 2009 (11:50 IST)
இந்தியாவிலும் சீனாவைப் போல் அதிவேக ரயில்களை இயக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக ரயில்வே இணை அமைச்சர் ஆர் வேலு கூறியிருக்கிறார்.

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் நேற்று 2 சாலை மேம்பாலங்கள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், சென்னையிலிருந்து பெங்களூருவுக்கும், கோவையிலிருந்து கொச்சிக்கும் அதிவேக ரயில்கள் இயக்க முடிவு செய்யப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டினார்.

ரயில்வேத் துறை தனியார் மயமாக்கப்படாது என்று உறுதி அளித்த அமைச்சர், ஆனால் தனியாருடன் கைகோர்த்து புதிய உத்திகள் மூலம் ரயில்வேத் துறை லாபம் ஈட்டி வருகிறது என்றார்.

காக்கிநாடா - சென்னை எக்ஸ்பிரஸ் விரைவில் புதுச்சேரி வரை நீட்டிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். திருத்தணி - சென்னை இடையேயும், வேலூர் - சென்னை இடையேயும் கூடுதல் ரயில்கள் இயக்கப்படவுள்ளதாகவும் ஆர். வேலு கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்