ஆப்கானிஸ்தானில் தாலிபான்களால் கடத்தப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த சைமன் என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சியை சேர்ந்த சைமன் என்பவர் ஆப்கானிஸ்தானில் வேலை பார்த்து வந்தார். அவரை கடந்த சில மாதங்களுக்கு முன் தாலிபான்கள் கடத்தி சென்று பணம் கேட்டு மிரட்டி வந்தனர்.
இவரை மீட்குமாறு அவரது குடும்பத்தினர் மத்திய, மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தனர். இந்நிலையில் கேட்ட பணம் கிடைக்காத ஆத்திரத்தால் தாலிபான்கள் சைமனை சுட்டுக் கொன்றனர்.
இந்த செய்தியை அறிந்த கள்ளக்குறிச்சியில் உள்ள சைமன் குடும்பத்தினர் கதறி அழுதனர். அவரது கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.