அன்று காலை 9.30 மணிக்கு நிதியமைச்சர் க.அன்பழகன் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வார் என அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மாதம் 21ஆம் தேதி ஆளுநர் உரையுடன் துவங்கிய தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் கடந்த வாரம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்ட நிலையில், வரும் 17ஆம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.