செங்கல்பட்டு அருகே கூடுவாஞ்சேரியில் தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த எருமை மீது மோதியதால் மின்சார ரயில் தடம் புரண்டது.
சென்னையில் கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு நோக்கிச் சென்று கொண்டிருந்த மின்சார ரயில் கூடுவாஞ்சேரி அருகே வந்தபோது தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த எருமை மீது பயங்கரமாக மோதியது.இதில் ரயில் தடம்புரண்டது.
எனினும் ரயிலில் இருந்த பயணிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த விபத்தால் தாம்பரம்-செங்கல்பட்டு ரயில் பாதையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.