தைப்பூசம்: பழனியில் தேரோட்டம்

ஞாயிறு, 8 பிப்ரவரி 2009 (13:01 IST)
தைப்பூசத்தையொட்டி பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் தேரோட்டம் இன்று நடைபெற்றது.

தேரோட்டத்தைக் காணவும், தைப்பூச வழிபாட்டிற்காகவும் பல்லாயிரக்கணக்கானோர் பழனியில் குவிந்தனர். தைப்பூசத்தையொட்டி பழனிக்கு பல்வேறு இடங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

பழனிக்கு தைப்பூசத்தையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு ஊர்களில் இருந்தும் பாதயாத்திரையாக வந்து, முருகனை வழிபட்டனர்.

தைப்பூசத் திருநாளில் திருச்செந்தூர், பழனி உட்பட முருகப்பெருமானின் அறுபடை வீடுகளிலும், அனைத்து முருகன் தலங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டும் தைப்பூசத்தையொட்டி அனைத்து முருகன் ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

சென்னை வடபழனியில் பக்தர்கள் ஏராளமாக குவிந்து, நீண்ட வரிசையில் நின்று முருகனை தரிசித்தனர்.

தைப்பூச நாளில் தான் வள்ளலார் முக்தி அடைந்ததாக். அவர் மறைந்த வடலூரில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சத்திய சன்மார்க்க சபையில் வள்ளலாரின் நினைவு தினத்தையொட்டி அன்னதானத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்