ஒரத்தநாடு அருகே ராஜீவ்காந்தி சிலைக்கு செருப்பு மாலை
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே ராஜீவ்காந்தி சிலை அவமதிப்பு செய்யப்பட்டதைத் தொடர்ந்து காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா திருவோணம் ஒன்றியம் ஊரணிபுரம் என்ற கிராமத்தில் ராஜீவ்காந்தி சிலை உள்ளது. அந்த சிலைக்கு நேற்றிரவு மர்ம ஆசாமிகள் சிலர் செருப்பு மாலையும், துடைப்ப மாலையும் அணிவித்திருந்ததை பார்த்து காங்கிரசார் அதிர்ச்சியடைந்தனர்.
இதனை கண்டித்து திருவோணம் முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ராஜேந்திரன் மற்றும் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து திருவோணம் காவல்நிலையத்தில் காங்கிரசார் புகார் கொடுத்தனர். இதன் பேரில் ராஜீவ் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்தவர் யார் என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.