சேலம் சட்டக்கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம் ‌வில‌க்க‌ல்

செவ்வாய், 3 பிப்ரவரி 2009 (10:19 IST)
இல‌ங்கை‌த் த‌மிழ‌ர்களு‌க்காக கட‌ந்த 6 நா‌ட்களாக உ‌ண்ணா‌விரத‌‌ம் இரு‌ந்து வ‌ந்த சேல‌ம் ச‌ட்ட‌க்க‌ல்லூ‌ரி மாணவ‌ர்க‌ள் நே‌ற்‌றிரவு உ‌ண்ணா‌விர‌தத்தை ‌வில‌க்‌கி‌க் கொ‌ண்டன‌ர்.

இலங்கை‌‌யி‌ல் அ‌ப்பா‌வி த‌மிழ‌ர்க‌ள் ‌மீது ‌சி‌ங்கள ராணுவ‌ம் நட‌த்‌தி வரு‌ம் கொடூர‌த் தா‌க்குதலை க‌ண்டி‌த்து‌ம், உடனடியாக இல‌ங்கை‌யி‌ல் போரை ‌நிறு‌த்த ம‌த்‌திய அரசை வ‌லியுறு‌த்‌தியு‌ம் சேலம் மத்திய சட்டக்கல்லூரி மாணவர்கள் காலவரைய‌ற்ற உ‌ண்ணா‌விரத‌ப் போரா‌‌ட்ட‌ம் நட‌த்த‌ி வ‌ந்தன‌ர். நேற்று 6-வது நாளாக அவ‌ர்க‌ள் உண்ணாவிரதம் இருந்தனர்.

இவர்களை பா.ம.க., ம.தி.மு.க, விடுதலை சிறுத்தை அமைப்பினர் சந்தித்து ஆறுதல் கூறினர்.

இந்த நிலையில் ம.தி.முக. பொது செயலர் வைகோ நேற்று நள்ளிரவு சேலம் வந்து மாணவர்களுக்கு பழச்சாறு கொடுத்து உண்ணாவிரத போராட்டத்தை முடித்து வைத்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்