இலங்கையில் ஈழத் தமிழர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை கண்டித்தும், அங்கு போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தியும் 7வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வந்த செங்கல்பட்டு சட்டக் கல்லூரி மாணவர்களை காவல்துறையினர் இன்று கைது செய்தனர்.
கடந்த 22ஆம் தேதி முதல் உண்ணாவிரதம் போராட்டத்தை தொடங்கிய மாணவர்களின் 4 பேர் மயக்கம் அடைந்ததைத் தொடர்ந்து அவர்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் 7வது நாளாக இன்றும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.