தமிழக தலைமைச் செயலராக இருந்த திரிபாதியின் தொலைபேசி பேச்சு வெளியான விவகாரத்தில் அப்போது லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் காவல்துறை தலைமை இயக்குனராக (ஏ.டி.ஜி.பி) இருந்த உபாத்யாயா தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார்.
இந்த விவகாரம் குறித்து சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதில் அங்கு ஊழியராக இருந்த சங்கர் என்பவர் கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து, உபாத்யாயாவின் பணி நீக்க உத்தரவை உள்துறைச் செயலர் மாலதி ரத்து செய்து உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து சென்னை நகர போக்குவரத்து கழக தலைமை விஜிலன்ஸ் அதிகாரியாக உபாத்யாயா நியமிக்கப்பட்டுள்ளார்.