சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதனையொட்டி அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்கு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதில் குமரி அனந்தன், பூவராகன், பி.பி.கலியபெருமாள், ஆர்.தாமோதரன், முன்னாள் துணை மேயர் கராத்தே ஆர்.தியாகராஜன் உள்பட பலர் பங்கேற்றனர்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் பொதுச் செயலர் கரு.நாகராஜன் தலைமையில் கட்சியினர் சென்னை கடற்கரை சாலையில் உள்ள நேதாஜி திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் சார்பில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உருவச்சிலைக்கு மாநில பொதுச் செயலர் இசக்கிமுத்து தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.