ஈரோடு அருகே உயிருக்கு போராடிய பெண் யானை பரிதாபமாக இறந்தது.
ஈரோடு அருகே உள்ளது அந்தியூர். இங்குள்ள வனப்பகுதியில் சுமார் 25 வயது மதிக்கதக்க பெண் யானை ஒன்று நோயால் பாதிக்கப்பட்டது. இதனால் வனப்பகுதியில் படுத்து எழுந்து செல்லமுடியாத பெண் யானைக்கு வனத்துறையினர் கால்நடை மருத்துவர்கள் மூலம் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
நோய்வாய்பட்ட யானைக்கு குளுகோஸ், கால்சியம் உள்ளிட்டவைகள் கொடுக்கப்பட்டது. தீவிர சிகிச்சை அளித்தும் பாதிக்கப்பட்ட பெண் யானையை காப்பாற்ற முடியவில்லை. நேற்று மாலை சிகிச்சை பலனின்றி யானை இறந்தது.