ஜனவரி 8 முதல் புத்தகக் கண்காட்சி

திங்கள், 29 டிசம்பர் 2008 (17:28 IST)
தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின், 32வது சென்னை புத்தகக் கண்காட்சி, ஜனவரி 8ஆம் தேதி தொடங்குகிறது. கண்காட்சியை முன்னாள் குடியரசு‌த் தலைவ‌ர் அப்துல் கலாம் தொடங்கி வைக்கிறார்.

பூந்தமல்லி சாலையில், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள புனித ஜார்ஜ் பள்ளி மைதானத்தில் ‌இ‌ந்த கண்காட்சி நடக்கிறது. ஜனவ‌ரி 18ஆம் தேதி வரை நடக்கும் கண்காட்சியில், 600 அரங்குகள் இடம்பெறுகின்றன.

இதில், தமிழ், ஆங்கிலம் மற்றும் பிறமொழி புத்தகங்கள் மட்டுமின்றி, ஆடியோ, வீடியோ குறுந்தகடுகளும் விற்கப்பட உள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்