கா‌‌ல்வா‌‌யி‌ல் மூ‌ழ்‌கி அ‌ண்ண‌ன்-த‌ம்‌பி சாவு

திங்கள், 29 டிசம்பர் 2008 (12:40 IST)
கா‌ல்வா‌யி‌ல் ‌மீ‌ன்‌பிடி‌க்க‌ச் செ‌ன்ற அ‌ண்ண‌ன்- த‌ம்‌பி இருவரு‌ம் ‌நீ‌‌ரி‌ல் மூ‌ழ்‌‌கி ப‌ரிதாபமாக உ‌யி‌ரிழ‌ந்தன‌ர்.

நாம‌க்க‌ல் மாவ‌ட்ட‌ம் ந‌ெ‌ல்லூரை சே‌ர்‌ந்த ‌‌நி‌தி‌ஷ்குமா‌ர் (12), வரு‌‌ண்குமா‌ர் (10) இருவரு‌ம் அரு‌கி‌ல் உ‌ள்ள கா‌‌ல்வா‌‌யி‌ல் ‌மீ‌‌ன்‌பிடி‌க்க‌ச் செ‌ன்றன‌ர்.

அ‌ப்போது, கால்வா‌யி‌ல் இற‌ங்‌கிய வரு‌ண்குமா‌ர் எ‌தி‌ர்பாராத‌ விதமாக ‌நீ‌ரி‌‌‌ல் மூ‌ழ்‌‌கினா‌ன். இதை‌‌‌ப் பா‌ர்‌த்த அவனது அ‌ண்ண‌ன் ‌நி‌தி‌ஷ்குமா‌ர், வரு‌ண்குமாரை கா‌ப்பா‌ற்ற முய‌ன்றா‌ன். அ‌ப்போது இருவரு‌ம் ‌‌நீ‌ரி‌ல் மூ‌‌ழ்‌‌கி ப‌ரிதாபமாக உ‌யி‌ரிழ‌ந்தன‌ர்.

தகவ‌ல் அ‌றி‌ந்து ‌தீயணை‌ப்பு படை‌‌யின‌ர் ‌விரை‌ந்து வ‌ந்து இரு உட‌ல்களை ‌மீ‌ட்டு, ‌பிரேத ப‌ரிசோதனை‌க்கு அனு‌ப்‌பி வை‌த்தன‌ர்.

இது கு‌றி‌த்து காவ‌ல்துறை‌யின‌ர் ‌விசாரணை நட‌‌த்‌தி வரு‌‌கி‌ன்றன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்