கார்வேந்தன் எம்.பி.க்கு கொலை மிரட்டல் விடுத்தவ‌ர் கைது

திங்கள், 29 டிசம்பர் 2008 (11:41 IST)
கா‌ங்‌கிரசை சே‌ர்‌ந்த நாடாளும‌ன்ற உறு‌ப்‌‌பின‌ர் கா‌ர்வே‌ந்தனு‌க்கு தொலைபே‌சி மூல‌ம் கொலை ‌மிர‌ட்ட‌ல் ‌விடு‌த்தவரை காவ‌ல்துறை‌யின‌ர் நே‌ற்‌றிரவு கைது செ‌ய்து ‌‌தீ‌விர ‌விசாரணை நட‌த்‌தி வரு‌கி‌ன்றன‌ர்.

நாடாளும‌ன்ற உறுப்பினராக உ‌ள்ள எஸ்.கே.கார்வேந்த‌னி‌ன் தாராபுர‌‌‌‌ம் வீ‌ட்டு‌க்குள் கடந்த 25ஆ‌ம் தேதி அ‌த்து‌‌மீ‌றி நுழை‌ந்த மர்ம நபர்கள் காங்கிரஸ் கொடியை எரித்து ‌வி‌ட்டு, ஒரு மிரட்டல் கடிதத்தையும் போட்டு சென்றனர். இந்த‌ ‌நிக‌ழ்வு கு‌றி‌த்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில் நேற்று அவரது வீட்டுக்கு மீண்டும் தொலைபே‌சி மூலம் மிரட்டல் வந்தது. அ‌ந்த ‌ந‌ம்பரை ப‌திவு செ‌ய்த எ‌ம்.‌பி.‌யி‌‌ன் உத‌வியாள‌ர் நடராஜன், தாராபுரம் காவ‌ல்துறை‌யி‌ல் புகார் செய்தார்.

காவ‌ல்துறை‌யின‌ர் வழக்குப்பதிவு செ‌ய்து தொலைபே‌சி நம்பர் குறித்து ச‌‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட ‌நிறுவன‌த்‌திட‌ம் விசாரித்தனர். அப்போது, பவானி ஜம்பை, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராஜா (35) என்பவ‌ர் ‌மிர‌ட்ட‌ல் ‌விடு‌த்தது தெரியவந்தது.

இதையடு‌த்து, காவ‌ல்துறை‌யின‌ர் நே‌ற்‌றிரவு அ‌ங்கு ‌விரை‌ந்து செ‌ன்று ராஜாவை கைது செ‌ய்தன‌ர். அவ‌ரிட‌ம் ‌தீ‌விர ‌விசாரணை நட‌த்‌தி வரு‌கி‌ன்றன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்