திருமங்கலத்தில் ஜன. 9ல் பொதுவிடுமுறை

ஞாயிறு, 28 டிசம்பர் 2008 (17:00 IST)
மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில் வரும் 9ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுவதால், அத்தொகுதிக்கு உட்பட்ட அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு பொது விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசு அலுவலகங்கள், தொழிற்சாலைகள் மற்றும் அரசு கட்டுப்பாட்டில் உள்ள தொழிற்சாலைகள், அனைத்து கல்வி நிலையங்களுக்கும் வாக்குப்பதிவு நடைபெறும் 9 ஆம் தேதி மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாநில அரசின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்